Sri Vidya Vihar College of Education is a premier institution dedicated to excellence in teacher education and holistic development.

img
img

B.Ed Tamil

B.Ed Tamil

தமிழ்

இப்பாடநெறி தமிழ் கற்பித்தலின் அடிப்படை நோக்கங்கள், குறிக்கோள்கள், கற்பித்தல் திறன்கள், அணுகுமுறைகள், முறைகள் மற்றும் நவீன கற்பித்தல் ஊடகங்களை முழுமையாக அறிமுகப்படுத்துகிறது. மாணவர்-ஆசிரியர்கள் திறமையான, விழுமியமிக்க மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கற்பித்தலை மேற்கொள்ள இப்பாடம் வழிகாட்டுகிறது.

அலகு – 1 : தமிழ் கற்பித்தலின் நோக்கங்களும் குறிக்கோள்களும்

  • தமிழ் கற்பித்தலின் அடிப்படை மற்றும் விழுமங்கள் – ஒழுக்கநெறி, சமுதாயமேன்மை, இறையுணர்வு.
  • கற்பித்தலுக்கான நோக்கங்கள் மற்றும் நடத்தைக்கான நோக்கங்கள்.
  • தமிழ் கற்பித்தலின் தேவை மற்றும் முக்கியத்துவம்.
  • புளுமின் வகைமைநெறி – அறிவுக்களம், உணர்தல் களம், உளஇயக்கசார் களம்.
  • திருத்தப்பட்ட புளுமின் வகைமைநெறி (2001 – ஆண்டர்சன் & கிரத்வால்).
  • களங்களுக்கு இடையேயான தொடர்பு மற்றும் பாடங்களுக்கு இடையேயான தொடர்பு.

அலகு – 2 : கற்பித்தல் திறன்கள்

  • நுண்ணிலைக் கற்பித்தல் – பொருள், வரையறை, படிநிலைகள் மற்றும் சுழற்சி.
  • தொடங்குதல் திறன், விளக்குதல் திறன் மற்றும் வினாக்கேட்டல் திறன்.
  • பல்வகைத் தூண்டல் திறன் மற்றும் வலுவூட்டிகளைப் பயன்படுத்தும் திறன்.
  • கரும்பலகையைப் பயன்படுத்தும் திறன் மற்றும் முடிக்கும் திறன்.
  • உற்றுநோக்கல், இணைப்புப்பாடம் மற்றும் பாடநிகழ்வு.
  • நுண்ணிலைக் கற்பித்தலுக்கும் வகுப்பறைக் கற்பித்தலுக்கும் இடையேயான வேறுபாடு.

அலகு – 3 : கற்பித்தல் அணுகுமுறைகள்

  • பாடம் கற்பிப்புத் திட்டத்தின் அணுகுமுறைகள் மற்றும் அவற்றின் இன்றியமையாமை.
  • பாடம் கற்பித்தலின் படிநிலைகள் மற்றும் கற்பித்தலை ஒழுங்கமைத்தல்.
  • நினைவகநிலை – ஹெர்பார்டியன் கற்பித்தல் மாதிரி.
  • புரிதல் நிலை – மோரிசன் கற்பித்தல் மாதிரி.
  • பிரதிபலிப்பு நிலை – பிக்கி & ஹண்ட் கற்பித்தல் மாதிரி.
  • பாடம் கற்பிப்புத் திட்டம் மற்றும் அலகுத்திட்டம் தயாரித்தல்.

அலகு – 4 : கற்பித்தல் முறைகள்

  • ஆசிரியர் மையக் கற்பித்தல் – விரிவுரைமுறை.
  • பகுத்தறிமுறை, தொகுத்தறிமுறை, விதிவருமுறை மற்றும் விதிவிலக்கமுறை.
  • செயல்விளக்கமுறை.
  • மாணவர் மையக் கற்பித்தல் – கருத்தரங்கம், பட்டிமன்றம்.
  • குழு விவாதம், குழு கற்பித்தல் முறை மற்றும் இடைவினையாற்றக் கற்றல்.
  • கெல்லர் திட்டம், செயல்வழிக்கற்றல் மற்றும் படைப்பாற்றல் கல்வி.
  • மனவரைபடம் மற்றும் கூடுதல் படைப்பாற்றல் கல்வி.

அலகு – 5 : கற்பித்தல் ஊடகம்

  • கற்பித்தல் ஊடகவகைப்பாடு மற்றும் வகுப்பறைப் பயன்பாடு.
  • மின்-கற்றல் மற்றும் விண்ணரங்கம்.
  • தகவல் தொடர்பு செயற்கைக்கோள் மற்றும் மொழிப் பயிற்றாய்வுக்கூடம்.
  • செயற்கை நுண்ணறிவு மற்றும் மெய்நிகர் தோற்றம்.
  • இணைத்துக் கற்றல், இணைய நூலகம் மற்றும் இணைப்பு நிஜமாக்கம்.

பரிந்துரைக்கப்பட்ட செயல்பாடுகள்

  • தமிழ் மொழி கற்பித்தலின் நோக்கங்கள் குறித்த கலந்துரையாடல்.
  • கற்பித்தல் திறன்களை மேம்படுத்த பயிலரங்குகள் ஏற்பாடு செய்தல்.
  • பல்வேறு அணுகுமுறைகளுக்கேற்ப பாடம் கற்பிப்புத் திட்டம் தயாரித்தல்.
  • கற்பித்தல் முறைகள் குறித்த ஆசிரியர் / வல்லுநர் கருத்துரை.
  • மொழி ஆய்வகங்களில் கற்பித்தல் ஊடகப் பயிற்சி.

Join Us Today!

மொழி, பண்பாடு மற்றும் கல்வி விழுமங்களை ஒருங்கிணைக்கும் திறமையான தமிழ் ஆசிரியராக உருவெடுக்க இன்றே சேருங்கள்.